தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு தடுப்பூசி இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. கூடுதல் தடுப்பூசியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாநில அரசே நேரடியாக தடுப்பூசி வாங்கவும், தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 79 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி, 12 லட்சத்து 90 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசி வந்தடைந்துள்ளன. சுமார் 73 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று (மே.24) புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவீஷில்டு தடுப்பூசி விமானம் மூலமாக சென்னை வந்டைந்துள்ளன.