சென்னை ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஏப்ரல் 19ஆம் தேதி மாலை ராஜீவ் காந்தி நகர் முதலாவது தெருவில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் அருகே சமையலுக்காக விறகு எடுக்கச் சென்றுள்ளார்.
பாழடைந்த கட்டடத்தில் வெடிபொருட்கள் வெடித்து சிறுமி காயம் - 2 Country bomb blasted
சென்னை: பாழடைந்த கட்டடத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது அந்த வீட்டின் உள்ளே இருந்த மூங்கில் கொம்பினை உடைக்க முயற்சிக்கும்போது திடீரென்று பாழடைந்த கட்டடத்தில் இருந்து வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியது. இதில் அந்த சிறுமி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்த ஐ.சி.எஃப். காவல் துறையினர், பாழடைந்த கட்டடத்தை ஆய்வுசெய்தபோது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பழைய வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய நபர்கள் யார்? என ஐ.சி.எஃப். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.