சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த விமானப் பயணிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜீத் (23), அகமது சலீக் (27) ஆகியோர் உடைமைகளில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ. 44 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி - chennai airport
சென்னை: திருவனந்தபுரம், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 44 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
Chennai
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ராஜா சைஜா நாகராஜன் (37) என்ற பெண்மணியின் உடமைகளில் ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 396 கிராம் கடத்தல் தங்க சங்கிலிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ. 44 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 59 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்