சென்னையில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
சென்ற முறை ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால்கூட முழு தெருவும் அடைக்கப்பட்டு மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.