சென்னை: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையலத்தில் 11 மாதங்கள் பயிற்சி முடித்த 197 வீரர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். பயிற்சி நிறைவு ஒட்டி பரங்கிமலை ராணுவ மையத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் நடத்தப்பட்டன.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு சென்னை பரங்கிமலையில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) உள்ளது. முப்படைகளிலும் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி மையத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 11 மாதங்களாக ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நடைபெற்று வந்தது.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு இந்நிலையில், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையலத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 197 இந்தியர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 161 ஆண் பயிற்சி அதிகாரிகளும் 36 பெண் பயிற்சி அதிகாரிகளும் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு மேலும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகளும், 8 பெண் அதிகாரிகளும் பயிற்சி நிறைவு செய்து தங்கள் நாட்டு ராணுவத்திற்கு திரும்பினர். இந்நிலையில், இங்கு பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இந்த அணிவகுப்பை ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு நிகழ்ச்சியில், பயிற்சி முடித்துச்செல்லும் வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுவினர்கள் காணும் வகையில் குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக் உட்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் குதிரையேற்றம், தடைகளைத் தாண்டுதல், குதிரையில் இருந்தே இலக்குகளை தாக்குதல் உள்ளிட்ட சாகசங்களை செய்தனர்.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு இறுதியாக தற்காப்புக் கலையான களரிப்பயிற்று சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் களரி பயிற்சிபெற்ற வீரர்கள் செண்ட மேள இசைக்கேற்ப நடனமாடியும், ஆயுதங்களைக் கொண்டும் பல்வேறு சாகசங்களை செய்தனர். அதனைத்தொடர்ந்து, பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட பயிற்சி அதிகாரி நக்கா நவீனுக்கு ராணுவ தலைமை தளபதி "கௌரவ வாளை" வழங்கி சிறப்பித்தார்.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு 197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு மேலும், அதிகாரி பயிற்சி மையத்தின் தங்கப் பதக்கத்தை சுதீப் குமார் சாஹுவுக்கும், வெள்ளிப் பதக்கத்தை துஷ்யந்த் சிங் ஷெகாவத்துக்கும், வெண்கலப் பதக்கத்தை ஜோதி பிஷ்ட்டுக்கும் ராணுவ தலைமை தளபதி வழங்கினார். நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பேசியதாவது, "தேசத்திற்கான தன்னலமற்ற சேவை என்ற முக்கிய நோக்கத்தை எப்போதும் கடைப்பிடித்து தங்கள் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்கப் பாடுபட வேண்டும்" என்று கூறி தேர்ச்சி பெற்ற ராணவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
197 இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ப்பு இதையும் படிங்க:ரூ.40 ஆயிரம் செலவிட்டும் லாபம் இல்லை... தலைகீழாக மாறிய தக்காளியின் விலை!