தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 195 பேருக்கு கரோனா பாதிப்பு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - கோவிட்

தமிழ்நாட்டில் மேலும் 195 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 195 பேருக்கு கரோனா பாதிப்பு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
மேலும் 195 பேருக்கு கரோனா பாதிப்பு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

By

Published : Jun 8, 2022, 10:55 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 195 என அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1021 என உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து புதிய பாதிப்பின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூன் 8-ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்கள் படி, ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 13 ஆயிரத்து 728 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 195 நபர்கள் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 55 லட்சத்து 53 ஆயிரத்து 236 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 512 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1021 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 101 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து 466 என உயர்ந்துள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனத்தில் 245 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 29 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்தப்பகுதியில் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 30 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 23 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 10 நபர்களுக்கும், திருவள்ளூரில் 11 நபர்களுக்கும், நீலகிரியில் 5 நபர்களுக்கும், ஈரோட்டில் நான்கு நபர்களுக்கும், ராணிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா மூன்று நபர்களுக்கும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா இரண்டு நபர்களுக்கும், மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் என 195 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் - நெகிழ்ச்சியில் சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details