சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் ஜூலை 24 ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 34,173 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதனால் ஆந்திராவில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் இருந்த 1,944 நபர்கள் உட்பட 1,945 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டன.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 67 லட்சத்து 28 ஆயிரத்து 947 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 35 லட்சத்து 32 ஆயிரத்து 343 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குட்பட்டு இருந்தனர் என்பது தெரியவந்தன.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.