தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு! - 19 people die today

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona
corona

By

Published : Jun 6, 2020, 8:04 PM IST

தமிழ்நாட்டில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று (ஜூன்.6) மட்டும் ஆயிரத்து 423 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 35 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஆயிரத்து 146 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், திருவள்ளூரில் 79 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 50 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அடங்கிய பட்டியல்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் வரும் வாரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என கூறியது போன்று பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஜெ. அன்பழகன் திராவிடத்தின் சொத்து' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details