சென்னை: சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எரிசக்தி துறையில் 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,
1. 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
2. சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
3. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அடித்தளத்தைக் கொண்ட மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக மிகக்குறுகிய அடித்தளம் கொண்ட மிக உயர் மின்னழுத்த ஒற்றை மின்கம்பங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.
4. தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
5. தமிழ்நாட்டில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் 10,809 உயரழுத்த மின் பாதைகளில் 6200 ஊரக பார்மின் பாதைகளில் 30 சதவீதத்திற்கு அதிகமான விவசாய மின் இணைப்புகள் கொண்ட 1686 ஊரக மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டு அதனை விவசாய மின் இணைப்புகள் கொண்ட பாதை மற்றும் விவசாய மின் இணைப்பு இல்லாத பாதைகளாக பிரித்து விவசாய மின் இணைப்பு மட்டும் கொண்ட மின் பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
7. தமிழ்நாட்டில் உயர்மின் அழுத்த கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் 273 மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டு அவைகளில் உயர் மின்னழுத்த வினியோக அமைப்பின் மூலம் குறைந்த அளவு திறன் கொண்ட மின் வினியோக மின்மாற்றிகள் நிறுவப்படும்.
8. தமிழ்நாடெங்கும் 4500 இடங்களில் ஒரே இடத்தில் இருக்கும் இரு மின் விநியோக மின்மாற்றிகள் உயர் மின் அழுத்த மின் வினியோக அமைப்பின் மூலம் பிரித்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. பழைய மற்றும் திறன் குறைந்த 542.08 கிலோமீட்டர் 33 கி.வோ.மின் பாதைகளை புதிதாக மாற்றப்படும்.