சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மொத்தம் 136 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய சில:
ரூ. 1018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம் அறந்தாங்கி,பரமக்குடி,கூடலூர்,திருத்தணி,வள்ளியூர்,திருப்பத்தூர்,காங்கேயம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
தென்காசி , குளித்தலை , திருச்சென்கோடு , அம்பாசமுத்திரம் , ராஜபாளயம் 5 ஆகிய மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தபடும்.
புதிய ஒருங்கிணைத்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில்15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். பரமக்குடி,கோவில்பட்டி,மணப்பாறை,உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி,மன்னார்குடி,கும்பகோணம்,சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய பத்து இடங்களில் பன்றிக்காய்ச்சல்,டெங்கு காய்ச்சல்,சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புதிய பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு தாலுகா மருத்துவமனை உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனை ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் திருநெல்வேலி மாவட்டம் கண்டியபெரி சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 5.85 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்கான ஒளிபுகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு வட்டம் மருத்துவமனை ரூபாய் 2.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறுகளை சுத்திகரிக்க நவீன நுண் கதிர் அறை ரூ 1.90 கோடி செலவில் கட்டப்படும் .
சென்னை பெரியார் நகர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 ரத்த வங்கிகள் அமைக்கப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.25 கோடி மதிப்பில் நவீன பிரேத பரிசோதனை கட்டடம் கருவிகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கித் திட்டத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சேலம் திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதயநோய் சிகிச்சை முறைகளை வலுப்படுத்த கேத்லேப் கருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் ரூபாய் 8.5 கோடி செலவில் வழங்கப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் நாற்பத்தி எட்டு திட்டத்தின் கீழ் மேலும் வலுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு,தர்மபுரி,திருவாரூர் தஞ்சாவூர்,திருநெல்வேலி,சிவகங்கை,ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒட்டன்சத்திரம் சீர்காழி மேலூர் ஊத்தங்கரை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 237.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் நாற்பத்தி எட்டு திட்டத்தின் கீழ் தென்சென்னை உள்ள சோழிங்கநல்லூர் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகளை கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை 60.65 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொண்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு 40.05 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
வட்டார அளவிலான பொது சுகாதாரத் துறை சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில் புதிய வட்டார பொது சுகாதார அலகுகள் ரூ 143.96கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வலிமைப்படுத்தபடும்.
மருத்துவ 400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 4 கோடி செலவில் பசுமையான இயற்கை சுற்றுச் சூழல் நிறைந்த ஒளிமிகு ஆரம்ப சுகாதார நிலையங்களாக அழகு படுத்தபடும்.
நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ரூபாய் 30 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்.
16 மாவட்டங்களில் 22 அரசின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூபாய் 26.40 கோடி செலவில் தேசிய நல்வாழ்வு குழுவில் கட்டப்படும்.