தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2ஆவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 11 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள் உட்பட 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Etv Bharatஇரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள்  ரத்து
Etv Bharatஇரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

By

Published : Dec 10, 2022, 11:06 AM IST

சென்னை:மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று(டிச.9) நள்ளிரவில் இருந்து இன்று (டிச.10)அதிகாலை வரையில் 14 விமானங்கள் திரையறங்க முடியாமல், பெங்களூரு, ஹைதராபாத் திரும்பிச் சென்றன. இந்நிலையில் இன்று (டிச.10)இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையம் 11 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள் உட்பட 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று(டிச.9) இரவில் இருந்து மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இன்று(டிச.10) அதிகாலை வரை, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 14 விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதில் நேற்று நள்ளிரவு வரையில் 9 விமானங்களும், அதன் பின்பு இன்று அதிகாலை வரையில் 5 விமானங்களும் ஆக மொத்தம் 14 விமானங்கள், இதைப்போல் பெங்களூரு, ஹைதராபாத் திரும்பிச் சென்றன. சிங்கப்பூர்,இந்தூர், மும்பை, துபாய், தோகாவில் இருந்து வரும் 14 விமானங்கள் அவ்வாறு திரும்பிச்சென்றன. அதன் பின்பு இன்று (டிச.10)அதிகாலையில் இருந்து, அந்த விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரத்தொடங்கியுள்ளன.

இன்று (டிச.10) இரண்டாவது நாளாக மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக, சென்னை விமானநிலையத்தில், கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பாதை புயலால் சேதம் - சென்னை மாநகராட்சி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details