தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

19 சட்ட மசோதாக்கள் நிலுவை: பழனிவேல் தியாகராஜன் - 19 சட்ட மசோதாக்கள் நிலுவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

By

Published : Mar 24, 2022, 2:46 PM IST

சென்னை:சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதில் உரையை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "வருவாய் துறையில் வருவாயை பெருக்கவும் சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு இரண்டு ஐஆர்எஸ் அலுவலர்களை நியமிக்க ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் செயலாற்றி வருகிறது.

அதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் இதுவரை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கப் பெறாததால் அரசாணை வெளியிட முடியாத நிலை‌யில் உள்ளன. இது எந்த வகையிலான ஜனநாயகம்.

வணிக வாகனங்களுக்கான வரி சீர்திருத்ததை செயல்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details