சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 25 ஆயிரத்து 871 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,845 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் உட்பட 1,846 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 67 லட்சத்து 82 ஆயிரத்து 53 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் 35 லட்சத்து 36 ஆயிரத்து 92 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.