தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - school development program

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகளை மேம்படுத்த ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக ரூ.1,300 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அனைத்து வகுப்பறைகளும் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகளை மேம்படுத்தப்படும் - அன்பில் மகேஷ்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகளை மேம்படுத்தப்படும் - அன்பில் மகேஷ்

By

Published : May 6, 2022, 9:58 PM IST

சென்னை :சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , “இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் சார்பாகவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகக் கண்காட்சி மட்டுமல்லாது நூல்கள், நூலகங்களுக்கும் முக்கியத்துவம் தரும் அரசு திமுக அரசு.

நூலகங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்து பழுதடைந்த நூலகங்களுக்கு விரைவில் புதிய நூலக கட்டடங்கள் கட்டித் தரப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகளை மேம்படுத்த ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.1,300 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து வகுப்பறைகளும் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - சிரிப்பால் அதிர்ந்த பேரவை

ABOUT THE AUTHOR

...view details