அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் 7 ஆண்டிற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தற்போதைய புதியதேர்வு விதிகளின்படி பொறியியல் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள பாடங்களை மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது.
'18 ஆண்டு அரியரை க்ளியர் செய்ய கடைசி வாய்ப்பு' - அண்ணா பல்கலை - last chance
சென்னை : 18 ஆண்டுகளாக பொறியியல் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அண்ணாப் பல்கலை கழகம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.
ஆனாலும், பலர் இதுவரை அரியர் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், பொறியியல் பாடங்களில் வைத்துள்ள அரியர் பாடங்களை முடிக்க அண்ணா பல்கலை கழகம் வாய்ப்பு வழங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 9ஆம் தேதி சிண்டிகேட் குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2019 டிசம்பர், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் சிறப்பு தேர்வுகளில் 18 வருடங்களாக அரியர் வைத்துள்ளவர்கள் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும், மேலும் இதுதான் இறுதி வாய்ப்பு எனவும் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.