சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அப்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ( COE - Controller of Examinations ) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின் அடிப்படையில் சேவை பணிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்படுகிறது.
18 % ஜிஎஸ்டி வரி
அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனாலும், மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கும்,
விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கும், எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்குச் சான்று அளிக்கும் சான்றிதழ்கள் ஆகிய 16 சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்' - முதலமைச்சர் நம்பிக்கை