தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Airport Covid Cases: சென்னை விமான நிலையத்தில் 18 பேருக்கு கரோனா! - சென்னை விமான நிலையில் 18 பேருக்கு கரோனா

Chennai Airport Covid Cases: சென்னை விமான நிலையத்தில் 18 பயணிகளுக்கு நடந்த ரேபிட் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதி
கரோனா தொற்று உறுதி

By

Published : Jan 4, 2022, 3:42 PM IST

Chennai Airport Covid Cases: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 30 நிமிடங்களில் ரிசல்ட் கிடைக்கக்கூடிய ரேபிட் பரிசோதனை மையம் உள்ளது. அங்கு நேற்று (ஜனவரி 3) இரவிலிருந்து இன்று (ஜனவரி 4) காலை வரை நடந்த ரேபிட் பரிசோதனைகளில் 18 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த 18 பயணிகளும் சென்னையிலிருந்து தோகா, சார்ஜா, துபாய் நாடுகளுக்குச் செல்ல வந்தவா்கள். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவர்கள். அனைவரும் 30-லிருந்து 40 வயதுக்குள்பட்ட ஆண் பயணிகள். இவர்கள் வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்ல வந்தவர்கள்.

பயணம் ரத்து

இதையடுத்து உடனடியாக விமான நிலைய அலுவலர்கள் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த 18 பயணிகளின் பயணங்களை ரத்துசெய்தனர். அந்தப் பயணிகளில் சிலர், தாங்கள் வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொண்டு, குணப்படுத்திக்கொள்கிறோம் என்று கூறினர். ஆனால் விமான நிலைய அலுவலர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாதிரிகள் பரிசோதனை

கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 18 பேரையும், அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த 18 பேருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா வைரசா அல்லது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா? என்பதைக் கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

அதுவரை அவர்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த ரேபிட் பரிசோதனையில் 18 பயணிகளுக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கழிப்பறைப் பயன்பாடு குறித்து ஐஐடி மாணவர்களின் விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details