தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான புதிய 18 அறிவிப்புகள் வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஏப்.10 ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான புதிய 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

By

Published : Apr 10, 2023, 10:11 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கான புதிய அறிவிப்புகள்

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஏப்.10 )தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான புதிய 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவைகள்;

1. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் மேற்கொள்ளப்படும்.

2. டாக்டர் சி. நடேசனார், சர்.பி டி தியாகராயர், டாக்டர் டி.எம் நாயர் ஆகியோரின் சிறப்புகள் பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறியும் வகையில் திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகளை தாங்கி ஒரு வரலாற்றுச் சின்னம் அமைகின்ற அளவிற்கு திராவிட இயக்க வீரர்கள் கூட்டம் தலைநகர் சென்னையில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3. மாமன்னர் பூலித்தேவர் படையின் முக்கிய தளபதியாக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம் விஸ்வநாதப்பேரியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவருட்சிலை அமைக்கப்படும்.

4. சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பெருந்துணையாக நின்ற வீராங்கனை குயிலிக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

5. சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

6. சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் அவர்களது பிறந்த நாளான ஜூன் 10 அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும்.

7. ஈரோடு மாவட்டம், சென்னி மலையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு சென்னிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.

8. பரப்பிக்குளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்ற காரணமாக இருந்த பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் திருவுருவ சிலை ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9. மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும்.

10. தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திரு உருவ சிலை அமைக்கப்படும்.

11. நாமக்கல் மாவட்டம், கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அவருக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் மார்பளவு சிலை அமைக்கப்படும்.

12. பிரபல பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை அமைக்கப்படும்.

13. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

14. சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

15. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிலும் மாணவர்களின் குறும் படப்பிடிப்பு தயாரிப்பு செலவுகள் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

16. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தலைமையிட பயன்பாட்டிற்கென கணினி, மடி கணினி அச்சுப்பொறி நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

17. சென்னையில் உள்ள அரசு மைய அச்சகத்திற்கு ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் ஒரு தெர்மனல் சிடிபி இயந்திரம் கொள்முதல் செய்து உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

18. பொது மக்களின் விருப்பத்தின் பேரில் சேலம் விருத்தாச்சலம் மற்றும் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

இதையும் படிங்க:"ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம்" : இ-கேமிங் ஃபெடரேஷன்!

ABOUT THE AUTHOR

...view details