சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - seized
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது, துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(40) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவுமில்லை என்பதால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 514 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக ஹாஜா மொய்தீனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.