தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: போலீசிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட புகாரளித்தவர்! - 18 lakh hawala money laundered

சென்னை: இளைஞரைத் தாக்கி 18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி செய்தது தொடர்பாக மூன்று வழக்கறிஞர்கள் உள்பட நான்கு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

18 lakh hawala money
18 lakh hawala money

By

Published : Dec 14, 2019, 4:34 PM IST

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (36). இவர் நேற்று இரவு இரண்டாவது கடற்கரையில் உள்ள பணப்பரிமாற்றம் அலுவலகத்திலிருந்து சுமார் 17 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் தனது உரிமையாளரான முகமது அனீஸ் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஏழு நபர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அருகே இருவரையும் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு 17 லட்சத்து 91ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முகமது அபுபக்கர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே பழரசக்கடை நடத்திவரும் தர்மதுரை என்பவர் இரவு 10 மணியளவில்கடையை மூடிவிட்டுச் செல்லும்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அருகே பணப்பை இருந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் முகமது அபுபக்கரை வரவழைத்து அந்தப் பையை திறந்து பார்க்கும்போது எட்டு லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தர்மதுரையை விசாரணை செய்ததில் தனது வீட்டில் ஏழு லட்சத்து 90 ஆயிரம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

வெளியான சிசிடிவி காட்சி

பின்னர் மீதி பணம் பற்றி விசாரிக்கும்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறினார். இவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சதீஷ் குமார், லோகேஷ், சுகுமார் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:
தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details