தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் - 18 kilos of silver has been siezed by the police Department

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவிற்கு கடத்தப்பட்ட 18 கிலோ வெள்ளி : காவல்துறைபறிமுதல்
ஆந்திராவிற்கு கடத்தப்பட்ட 18 கிலோ வெள்ளி : காவல்துறைபறிமுதல்

By

Published : Apr 10, 2022, 4:56 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9ஆவது நடைமேடையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது 18 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 2.5 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டது சவுகார்பேட்டை அனுந்தராயன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் என்பதும், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு கடந்த திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: சென்னையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி யூடியூபர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details