தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதிய பயணிகள் இல்லாததால் 18 சா்வதேச விமானங்கள் ரத்து - சென்னை விமான நிலையம்

சென்னை: கொரோனா வைரஸ் எதிரொலியாக போதிய பயணிகள் இல்லாததால் 18 சா்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

chennai
chennai

By

Published : Mar 10, 2020, 12:30 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பீதியால் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் விமான பயணிகளின் வருகை குறைந்து போக்குவரத்து வெகுவாகப் பாதித்தன.

அதன்விளைவாக நேற்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் 10 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து இன்று 18 சா்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையம்

அதில், பிராங்க்பாா்ட்-சென்னை லுப்தான்ஷா ஏா்லைன்ஸ், குவைத்-சென்னை குவைத் ஏா்லைன்ஸ், தாய்லாந்து-சென்னை தாய் ஏா்லைன்ஸ், தோகா-சென்னை இண்டிகோ ஏா்லைன்ஸ், ஜெட்டா-சென்னை சவுதி ஏா்லைன்ஸ், குவைத்-சென்னை இண்டிகோ ஏா்லைன்ஸ், சென்ஷன்-சென்னை எஸ்.எஃப்.எக்ஸ். பிரஸ் ஏா்லைன்ஸ், குவைத்-சென்னை ஏா் இந்தியா ஏா்லைன்ஸ், சாா்ஜா-சென்னை ஏா் இந்தியா ஏா்லைன்ஸ் உள்ளிட்ட ஒன்பது சென்னைக்கு வரக்கூடிய விமானங்களும், சென்னையிலிருந்து புறப்படக்கூடிய ஒன்பது விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:நடுவானில் மாரடைப்பு: உயிரிழந்த விமான பயணி

ABOUT THE AUTHOR

...view details