தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 8, 2020, 8:20 PM IST

ETV Bharat / state

18 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர்.

Tamilnadu education
DPI

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 18 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் "பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர்.

  1. தொடக்கக்கல்வித் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வரும் அறிவழகன் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
  2. நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடக்கக் கல்வித் துறையில் துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
  3. ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  4. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  5. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர் மின் ஆளுமையில் பணிபுரியும் ஆறுமுகம் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  6. அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் துணை இயக்குனர் மின் ஆளுமை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
  7. திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் அரியலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  8. கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  9. கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  10. ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  11. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தேனி மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  12. தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விருதுநகர் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  13. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல் முருகன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  14. திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திற்கு நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  15. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  16. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  17. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
  18. திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்படுகிறார்.

என அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details