தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 கோடி ரூபாய் வசூல்செய்த காவல் துறை: ஊர் சுத்த போகாதீங்க மக்களே! - Persons around town in violation of the curfew

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்ட அபராதத் தொகை 18 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

police
police

By

Published : Jul 14, 2020, 1:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக ஏழாவது முறையாக ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளதால், இதனையே காரணம் காட்டி பலரும் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றுகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், தடை உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனர். அதன்படி, மார்ச் 24ஆம் தேதி முதல் இன்று வரை பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த அபராத தொகையின் விவரத்தைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழ்நாடு முழுவதும் 112 நாள்களில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 965 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 35 ஆயிரத்து 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 18 கோடியே 22 ஆயிரத்து 501 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமிக்கு கரோனா இல்லை!

ABOUT THE AUTHOR

...view details