தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறையில் 18 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம்! - chennai latest news

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இணை இயக்குநர்கள் 18 பேர், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை  இணை இயக்குநர்  பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்  இணை இயக்குநர்கள் மாற்றம்  பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம்  அரசாணை  காகர்லா உஷா  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா  Department of School Education  Co Directors in Department of School Education got transfer  18 Co Directors in Department of School Education got transfer  Co Directors  Department of School Education Co Directors  chennai news  chennai latest news  transfer
பள்ளிக்கல்வித்துறை

By

Published : Sep 23, 2021, 5:07 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இணைஇயக்குநர்கள் 18 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு-IIஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசாணை

மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்

இதில், பணியிடமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் விவரங்களையும், அவர்களது பணியிடங்களையும் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் விவரங்கள்,

1. நரேஷ் - பள்ளிக்கல்வி ஆணையரகத்தில் பணியாளர் தொகுதி இணை இயக்குநர்.

2. கோபிதாஸ் - இடைநிலைக் கல்வி இணை இயக்குநர்.

3. ராமசாமி - மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர்.

18 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம்

4. அமுதவல்லி - நாட்டுநலப் பணித்திட்ட இணை இயக்குநர்.

5. ஜெயக்குமார் - தொழிற்கல்வி இணை இயக்குநர்.

6. ஸ்ரீதேவி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பாடத்திட்ட இணை இயக்குநர்.

7. வை.குமார் - இணை இயக்குநர் (பயிற்சி).

8. ராஜேந்திரன் - நிர்வாகம் இணை இயக்குநர்.

9. எம்.வாசு - மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்கத்தில் இணை இயக்குநர்.

10. எஸ்.உமா - இரண்டாம் நிலை இணை இயக்குநர்.

11. ஆர்.பாஸ்கரசேதுபதி - மூன்றாம் நிலை இணை இயக்குநர்.

12. சசிகலா - தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநர் (நிர்வாகம்).

13. சாந்தி - இணை இயக்குநர் (உதவிபெறும் பள்ளிகள்).

18 இணை இயக்குநர்கள்

14. செல்வகுமார் - அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி).

15. பி.குமார் - இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி).

16. பொன்னையா - ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்.

17. எஸ்.சுகன்யா - ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்

18. ஆனந்தி - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர்.

இதையும் படிங்க: சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

ABOUT THE AUTHOR

...view details