சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜீவிமோன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - ஹெலன் தம்பதியினர், ஜீவிமோன் கஞ்சா வியாபாரம் செய்வது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் ஜீவிமோன், ராமச்சந்திரன் - ஹெலன் தம்பதியரின் 17 வயது மகளை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.