சென்னை:திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை (ஜூன் 3) போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 17 பேர் ஜன்னலை உடைத்து தப்பி சென்றுள்ளனர். இதனையறிந்த ஊழியர்கள் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.