சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
சுமார் 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் பிரதான கால்வாயின் 1ஆவது கிளைக் கால்வாயினை புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், சீவலப்பேரி குளத்தின் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை கட்டப்படுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய் மற்றும் துவரிமான் கண்மாய் ஆகிய கண்மாய்களில், அதன் மொத்த கொள்ளளவான 215.89 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிப்பது உறுதி செய்யப்படுவதோடு, 3360.13 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
இதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம், டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.