தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் பிடிபட்டனர் - கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் கைது

மளிகைக் கடையில் கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16-yr-old-teen-and-youth-arrested-in-chennai-for
கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் கைது

By

Published : Sep 19, 2021, 5:41 PM IST

சென்னை:சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் 37ஆவது தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர், சேகர்(49). இவருக்கு கடந்த 2 மாதங்களாக உடல் நிலை சரியில்லாததால், கடையை அவரது மனைவி மாரிச்செல்வி, மகள் சரஸ்வதி ஆகியோர் கவனித்து வந்தனர்

இந்நிலையில், நேற்று (செப்.18) கடைக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியைக் காட்டி, சேகரின் மகள் சரஸ்வதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த சரஸ்வதி, பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், கல்லா பெட்டியில் இருந்த ரூ. 5ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடி விட்டனர்.

கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் கைது

இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில், சேகர் புகார் அளித்ததின் பேரில், நாகல்கேணியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வினோத் குமார்(20) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வினோத் குமார்(20)

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறை, சிறாரை சீர்திருத்தப் பள்ளியிலும், வினோத் குமாரை சிறையிலும் அடைத்தனர்.

இதையும் படிங்க:சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்

ABOUT THE AUTHOR

...view details