தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் 16 விமானங்கள் ரத்து!

டெல்லி உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலையால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன

சென்னை விமானநிலையத்தில் 16 விமானங்கள் ரத்து!
சென்னை விமானநிலையத்தில் 16 விமானங்கள் ரத்து!

By

Published : May 23, 2022, 3:52 PM IST

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று செல்ல வேண்டிய விமானங்களான மாலை 3.10 மணி, மாலை 5.15 மணி விமானம், அதேபோல் டெல்லியில் இருந்து மாலை 4 மணி மற்றும் 4.36 மணிக்கும் நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்னை வரவேண்டிய விமானம் என 6 விமானங்கள் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து காலை 11.20 மணி, மதியம் 1 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய விமானம், மதியம் 12.55 மணி, இரவு 7.30 மணி மற்றும் இரவு 10 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுள்ளன.

ஹைதராபாத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம்,பெங்களூருவில் இருந்து காலை 10.50 மணிக்கும், மதியம் 3.55 மணிக்கும் சென்னை வரவேண்டிய இரண்டு விமானங்கள், மும்பையில் இருந்து மாலை 4.20 மணிக்கும் மற்றும் 6.45 மணிக்கு வரவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள்.

சென்னை விமானநிலையத்தில் 16 விமானங்கள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details