சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 15 வயது சிறுமி காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலைசெய்யும் ராஜேஷ் (19) என்பவர் சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி கடந்த மாதம் 28ஆம் தேதி கடத்திச் சென்றது தெரியவந்தது.
ராஜேஷின் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் தேடிவந்தனர். திருச்சி, சேலம் என ராஜேஷ் மாறி மாறி சுற்றிவந்ததால் காவல் துறையினர் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர். காவல் துறையினர் நெருங்கிவருவதை அறிந்த ராஜேஷ் செப்டம்பர் 30ஆம் தேதி சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (அக். 01) ஓட்டேரி பாலம் அருகே மறைந்திருந்த ராஜேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.