தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நங்கநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை - 15 சவரன் நகை கொள்ளை

சென்னை: நங்கநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

theft
theft

By

Published : Jan 24, 2020, 9:30 AM IST

சென்னையை அடுத்த நங்கநல்லூர் கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (35). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 16ஆம் தேதி குடியாத்தம் சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஞானசேகரன் அலுவலக வேலை காரணமாக ஹைதராபாத் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஞானசேகரன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகை கொள்ளை போனது குறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட இல்லம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவா மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்

ABOUT THE AUTHOR

...view details