சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து சசிகலாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய 1600 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டு போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 300 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டது.
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறையினர் அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இதனையடுத்து, கடந்தாண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என 100 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஓட்டி சென்றனர்.
இந்த நிலையில், சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சசிகாலா பினாமி பெயரில் வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை இன்று (ஜூலை.1) வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
புரட்சி பயணத்தில் சசிகலா.. இதுவரை ரூ.4000 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை... இதுவரை சசிகலாவிற்கு சொந்தமான சுமார் ரூபாய் 4000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், புரட்சிப் பயணம் என்னும் பெயரில் சசிகலா வட தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் மீதான வருமான வரித்துறையின் இந்த தொடர் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புரட்சி பயணத்தில் சசிகலா.. இதுவரை ரூ.4000 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை... இதையும் படிங்க: மதிப்பிழப்பு கரன்சிகளைப் பயன்படுத்தி மால்கள் வாங்கிய சசிகலா வழக்கு: வருமானவரித் துறை வாதம்!