தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக எச்சரிக்கை: 17 நிர்வாகிகள் நீக்கம்! - சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக நிர்வாகிகள் 15 பேர் நீக்கம்
அதிமுக நிர்வாகிகள் 15 பேர் நீக்கம்

By

Published : Jun 14, 2021, 3:53 PM IST

Updated : Jun 14, 2021, 8:30 PM IST

15:52 June 14

அதிமுக நிர்வாகிகள் 17 பேர் நீக்கம்

15:48 June 14

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, மேலும் சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசிய 17 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் 17 பேர் நீக்கம்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜுன்.14) சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

கட்சியிலிருந்து நீக்குவது தெரியாமல் அதிமுக அலுவலகம் வந்த வா. புகழேந்தி 

கட்சியிலிருந்து நீக்குவது தெரியாமல்ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியும் வந்திருந்தார். அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்துப் பேசியதால், இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. 

16 மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதயனையடுத்து சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசிய 16 மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி உள்ளது.

அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். 

மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக, மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் கீழ் ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுப்படுத்துகிறோம். 

அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாக யாராக இருப்பினும் அவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு 2021 மே மாதம் 23 ஆம் தேதி அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!

Last Updated : Jun 14, 2021, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details