சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை நிர்ணயித்துவருகின்றன.
அதன்படி, சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 147 உயர்த்தப்பட்டு, ரூ.881க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.