தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளில் நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் ஏற்பட்டு 141 பேர் இறப்பு - பொது சுகாதாரத்துறை! - DPH
Rabies Death in Tamilnadu: தமிழகத்தில் 2018 முதல் 2023 வரை சுமார் 44 லட்சத்து 10 ஆயிரத்து 964 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதில் 141 பேர் இறந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தனது ஆய்விதழில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளில் நாய் கடித்தில் ரேபிஸ் நோய் ஏற்பட்டு 141 பேர் இறப்பு..!
சென்னை: தமிழகத்தில் 2018 முதல் 2022 வரை வெறி நாய்க்கடியால் 37 லட்சத்து 71 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 121 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர் எனவும் பொதுச் சுகாதாரத்துறை தனது ஆய்விதழில் தெரிவித்துள்ளது.
நாய் கடித்த பின்னர் தொடர்ந்து சரியான முறையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் ரேபிஸ் நோய் வராமல் தடுக்க முடியும். இது தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தடுக்கப்படக்கூடிய ஜூனோடிக் வைரஸ் நோயாகும். இது மிகவும் ஆபத்தான ஒரு நோய் ஆகும். இந்த நோய் வந்தால் அதன் பின்னர் குணப்படுத்தி காப்பாற்றுவது என்பது மிகவும் சிரமான காரியமாகும்.
உலகளவில் ரேபிஸ் நோய் 150 நாடுகளில் பரவி 59,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. நாய்கள் தான் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
இந்த இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க இந்தியா அரசு 2030ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் இறப்பு இல்லாத இந்தியா என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக இந்தியா அரசு ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு ரேபிஸ் நோயைத் தடுக்க செயல்திட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரேபிஸ் நோய் தடுப்பதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், ரேபிஸ் நோயைத் தடுக்கும் வழிமுறைகள், திட்டங்கள் மற்றும் இடர்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.
அதில், நாய்க்கடியைத் தடுப்பது, நாய்க்கடியை வகைப்படுத்துவது, ரேபிஸ் தொற்றைக் கண்டறிவது மற்றும் ரேபிஸ் தொடர்பான முந்தைய தகவல்கள் இல்லாதது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் ரேபிஸ் பூஜ்ஜிய இறப்பு என்ற இலக்கை நெருங்கவில்லை என தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 8.83 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2018 முதல் 2022 வரை 44 லட்சத்து 10 ஆயிரத்தில் 964 பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2018 முதல் 2022 வரை ரேபிஸ் நோயால் (வெறி நாய்க்கடி) 121 இறந்துள்ளனர். சென்னையில் ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குறைந்தது 5,500 முதல் 6,000 நபர்கள் நாய் கடித்தல் சிகிச்சை பெற்றுள்ளனர்.
எனவே, ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சித் துறை உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் இறப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களைக் கண்டறிந்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசிப் போடப்பட வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ரேபிஸ் நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பூசியைப் போட வேண்டும். நாய் கடித்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொது மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாய் கடித்த பின் என்ன செய்ய வேண்டும்: நாய் கடித்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கடிபட்ட காயத்தை 15 நிமிடங்களுக்கு சோப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.
மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றி தடுப்பூசியை முறையாகச் செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எவ்வித மூலிகை மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது. சுய மருத்துவம் செய்யக் கூடாது. எனவும், பொதுச் சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்: