கத்தாா் தலைநகா் தோகாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று (ஜூன் 1) சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தடைந்தது. அப்போது அதில் வந்திறங்கிய சென்னையை சோ்ந்த சதீஷ்(28), தன்னிடம் எதுவும் இல்லை என கூறி பயணிகள் சோதனை அறையை விட்டு வேகமாக வெளியே சென்றுள்ளார். ஆனால், சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இ - பாஸ் கவுண்டரில் நின்று கொண்டிருந்த சதீஷை, மீண்டும் உள்ளே அழைத்துவந்து சோதனையிட்டனா்.
சென்னை விமான நிலையத்தில் 140 கிராம் தங்கம் பறிமுதல் - chennai latest news
சென்னை: கத்தாரிலிருந்து கடத்திவரப்பட்ட 140 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் 140 கிராம் தங்கம் பறிமுதல்
அதில் அவர் அணிந்திருந்த கால் உறையில் (ஷூ சாக்ஷ்) மூன்று தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் எடை 140 கிராம், அதன் சா்வதேச மதிப்பு ரூ.7.14 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறையினர் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ் கைது செய்யப்பட்டு, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது!
Last Updated : Jun 2, 2021, 10:27 AM IST