தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது - சென்னை கஞ்சா கடத்தல்

வருமான வரித்துறை அலுவலரின் காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

14 kg kanja seized in chennai
14 kg kanja seized in chennai

By

Published : Aug 1, 2021, 12:26 PM IST

சென்னை : சூளைமேடு பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வருமான வரித்துறை ஆணையரின் போர்டு வைத்த காரில் பயணம் செய்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஒருவர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, காவல் துறையினர் மீதமுள்ள இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கொரட்டூரை சேர்ந்த வாணி, முருகன் என்பது தெரியவந்தது.

மேலும், தப்பியோடியது பிரகாஷ் என்பதும், வாணியின் கணவர் பெசன்ட் நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலரிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், அவர் பழனி கோயிலுக்கு சென்றுள்ளதால் அவரது காரை பயன்படுத்தி கஞ்சா வியாபாரம் செய்ததாகவும் தெரிவித்துள்னர்.

இதையடுத்து கொரட்டூரில் உள்ள வாணி வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இதையும் படிங்க: கடன் பிரச்னை - அதிமுக ஊராட்சித் தலைவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details