வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
rain
சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: வந்தது வடகிழக்கு பருவமழை! வருமுன்னே ஆரம்பித்தது பாதுகாப்பு நடவடிக்கை!