தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 14 கட்டுமான இடங்களுக்கு சீல் - எதற்கு தெரியுமா? - Chennai Corporation Commissioner

சென்னை மாநகராட்சியில் விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 347 இடங்களில் கட்டுமானப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 18, 2022, 10:32 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும்.

மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், 15 மண்டலங்களிலும் கடந்த 3 தேதிஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் களஆய்வு மேற்கொண்டதில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமான இடங்களில் 245 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 203 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 14 கட்டுமான இடங்கள் இன்று (டிச.18) பூட்டி சீல் வைக்கப்பட்டன. கட்டட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்ட கட்டுமான இடங்களில் கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கிய பிறகும் கட்டட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 347 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'UPSC-க்கு தயாராகும் உங்களை கிண்டல் செய்தவர்கள் முன் சாதித்துக்காட்டுங்கள்' - ஆளுநர் நம்பிக்கை உரை

ABOUT THE AUTHOR

...view details