சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணம் வைத்து போகர் சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
சென்னையில் சூதாட்டம்: 14 பேர் கைது! - Chennai District News
சென்னை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.கே.பி நகரை சேர்ந்த முகேஷ் (39), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாகஸ் (23), தேவேஷ் (24), மிரேஷ்(27), அர்ச்சித் (26), அமீத்சிங் (36), சௌகார்பேட்டையை சேர்ந்த பவன் ஜெயின் (25), நிகேஷ் (30), ரிஷி ஜெயின் (23), புரசைவாக்கத்தை சேர்ந்த தீபக்குமார் (32), ஜீத் அகர்வால் (39), அங்கித் குப்தா (34),பெரியமேட்டை சேர்ந்த கவுசல்ஷா (24), கொண்டிதோப்பை சேர்ந்த அக்ஷய் (28) உட்பட 14 நபர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 14 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு ஜாமீனில் வெளியிட்டனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!