சென்னை:13ஆவது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்து, சென்னை நேரு மைதானத்தில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தினர் இன்று(ஜூன் 17) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் வாசுதேவன், "13-ஆவது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி வரும் 19ஆம் தேதி முதல் எழும்பூர் அம்பஸ்டர் பால்வா விடுதியில் 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
முதல் பரிசாக மூன்று லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதுவரை போட்டியில் கலந்து கொள்ள 268 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 28 வெளிநாட்டு வீரர்கள், 50க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.