சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 261 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தமிழ்நாட்டில் 1,357 நபர்கள் உட்பட 1,359 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 69 லட்சத்து 72 ஆயிரத்து 660 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 35 லட்சத்து 45 ஆயிரத்து 605 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.