தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல் ரூ.1,34,46,390 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி - fine

சென்னை: ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இன்றுவரை அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள், கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ஒரு கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஊரடங்கு விதிமீறல் ரூ.1,34,46,390  அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி
ஊரடங்கு விதிமீறல் ரூ.1,34,46,390 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி

By

Published : May 13, 2021, 9:30 PM IST

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அம்மா மாளிகை கூட்டரங்கில் ஊரடங்கு அமலாக்கக் குழுவினருடன் (Zonal Enforcement Team) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலாளர், பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

ஊரடங்கு அமலாக்கக் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தொடர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும், முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இன்றுவரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து ஒரு கோடியே 34 லட்சத்து 46ஆயிரத்து 390 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மே 6ஆம் தேதியில் இருந்து மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் ரூ.21,21800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கண்காணிப்பை தீவிரப்படுத்த மேலும் 15 குழுவினரை நாளை முதல் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: தீவிரமாகிறது முழு ஊரடங்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details