சென்னை:தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு சிலர் விற்று வருகின்றனர்.
இவர்களை தடுக்க தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் சார்பாக கடந்த ஒரு வாரமாக 14 தேதி முதல் 20 தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக ஈடுபட்ட ரோந்து பணிகளில் ஈடுபட்ட போது பல்வேறு இடங்களில் கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.