சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,032 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 25,866 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 1,302 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 69 லட்சத்து 98 ஆயிரத்து 526 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 லட்சத்து 46 ஆயிரத்து 907 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.