தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அதிரடி! - சென்னை செய்திகள்

tambaram police inspectors transfer: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 13 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 4:14 PM IST

சென்னை: தாம்பரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருந்த சார்லஸ், தாழம்பூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், மணிமங்கலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் செந்தில்குமரன், குன்றத்தூர் குற்றப்பிரிவுக்கும், குன்றத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்துரு, சேலையூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தாழம்பூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலு, குன்றத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், மணிமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார், சோமங்கலம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், பெரும்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அசோகன், மணிமங்கலம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், சோமங்கலம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமார், கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

அதே போல் கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி, குன்றத்தூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், குன்றத்தூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் சதீஷ், நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராகவும், சேலையூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ரங்கசாமி, வண்டலூர் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், வண்டலூர் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வெங்கடாசலம், மணிமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

அதேபோல் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், தாம்பரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், சிட்லபாக்கம் ஆய்வாளர் சண்முகம், பெரும்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், இடமாற்றங்கள் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்" - அமைச்சர் சேகர் பாபு!

ABOUT THE AUTHOR

...view details