தமிழ்நாட்டில் சில இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக சென்னை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கைது! - கைது
சென்னை: போலியான ஆவணங்களைக் கொண்டு போலி பாஸ்போர்ட் தயாரித்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கைது!
இதையடுத்து, பாஸ்போர்ட் தயார் செய்து வந்த 13 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சண்முகபிரியா முன்பு ஆஜர்படுத்தினர்.
சில தினங்களுக்கு முன் போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்து தங்கியிருந்த தனுகா ரோஷன் என்னும் நபரை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கியூ பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.