தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதி அறிவிப்பு - chennai news

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதியை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத்தேர்வு விடைத்தாள்
துணைத்தேர்வு விடைத்தாள்

By

Published : Sep 28, 2021, 5:58 PM IST

சென்னை: 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல் பெறுவதற்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆகஸ்ட் துணைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் வேண்டி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி காலை 11 மணி முதல் 5மணி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அந்த விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்லார்.

இதையும் படிங்க:1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details