தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஐந்தாவது பாடம் முழுவதும் நீக்கி உத்தரவு!

சென்னை: 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் ஐந்தாவது பாடம் முழுவதும் நீக்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

remove

By

Published : Jul 31, 2019, 12:21 AM IST

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாடப் புத்தகத்தில் உள்ள ஐந்தாவது பாடத்தில் 'the status of tamil as a classical language' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சமஸ்கிருத மொழியின் காலம் கி.மு.2000 ஆண்டுகள் எனவும், தமிழ் மொழியின் காலம் கி.மு.300 ஆண்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளது. தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ் மொழியை மாற்றிவிட்டு சமஸ்கிருத மொழி என தவறாக அச்சிடப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடத் திட்டத்தை எழுதிய ஆசிரியர்கள் குழுவை சேர்ந்த 13 பேருக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி, பள்ளி கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "2019-20ஆம் கல்வியாண்டில் வெளிவந்துள்ள புதிய பாடத்திட்டம் 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் 5ஆவது பாடமான 'The status of Tamil as classical Language by George L Hart' என்ற பாடத்தில் வினா எண் சி-யில் சமஸ்கிருத மொழியின் காலம் கி.மு.2000 ஆண்டுகள் எனவும் தமிழ் மொழியின் காலம் கி.மு.300 ஆண்டுகள் எனவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பாடம் முழுமையும் பக்கம் 142 முதல் 150 வரை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே 12ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் நீக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து தேர்விற்கு எந்த வினாக்கள் இடம்பெற வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் பாடம் 5 நீக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details